கீழக்கரை:திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயிலில் பங்குனி பிரம்மோத்ஸவ உற்சவ விழா நடந்து வருகிறது.இரவு 7:00 மணிக்கு சன்னதியின் முன்புறம் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில்உற்சவர் பத்மாஸனித்தாயாருக்குமங்கலநாண் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஸ்தானிக பட்டாச்சாரியார்களால் நாலாயிர திவ்யப்பிரபந்தப்பாடல்கள், சாற்றுமுறை, கோஷ்டி பாராயணமும்,யானை வாகனத்தில் வீதியுலா புறப்பாடு நடந்தது. பக்தர்களுக்கு தாம்பூல பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானநிர்வாகத்தினர் செய்திருந்தனர்.