உடுமலை மாரியம்மன் தேர்த் திருவிழா: மஞ்சள் நீர் ஊற்றி பெண்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2018 03:03
உடுமலை மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழாவையொட்டி பெண்கள் கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
உடுமலையில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந் துள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோவிலில் ஆண்டுதோறும் பங்குனிமாதத்தில் தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது. நடப்பாண்டில் வரும் ஏப்., 5ம்தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்த்திருவிழாவுக்காக, இன்று(மார்.,29ல்) பெண்கள் கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.