Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை மாரியம்மன் தேர்த் திருவிழா: ... பங்குனி உத்திர விரத முறை! பங்குனி உத்திர விரத முறை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பங்குனி உத்திரம் என்பது என்ன?
எழுத்தின் அளவு:
பங்குனி உத்திரம் என்பது என்ன?

பதிவு செய்த நாள்

29 மார்
2018
05:03

பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும், பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாளே பங்குனி உத்திரமாகும். இது சிவபெருமானைக் கல்யாண  சுந்தரமூர்த்தியாகக் குறித்து அனுஷ்டிக்கும் விரதம். பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் நிற்க சந்திரன் உத்திர நட்சத்திரத்தோடு  கன்னியில் நின்று பூரண கலைபெற்று ஏழாமிடமாகிய அங்கிருந்துதான் பூரண கிரணத்தை உத்திர நட்சத்திர குணத்தோடு பூமிக்குக்  கொடுத்தலால் இத்தினம் விசேஷமானதாகும். பார்வதி பாகராகிய சிவபெருமானைத் திருமணக்கோலத்தோடு தியானிப்பதாகலின்  திருமண விரதம் எனப்படும்.

அம்மையப்பன் வடிவங்களைப் பொன்னால் அமைத்து, அபிஷேக ஆராதனைகள் புரிந்து, சிவபெருமானை உமாதேவியாரோடும்  எழுந்தருளச் செய்து பூசை, அர்ச்சனை, தூபதீபங்களாதி கிரியைகளை விதிப்படி செய்தல் வேண்டும். ஓர் அந்தணனை  மனையாளோடழைத்து வேண்டியன கொடுத்து அமுது செய்வித்தல் வேண்டும். உமாபிராட்டியாரைத் திருமணம் புரியுந்தன்மையுடன்  சிவன் திருக்கோலத்தை மனதில் தியானம் செய்தல் வேண்டும். ஆலயம் சென்று வணங்கி, அஸ்தமனத்தின் மேல் இரவிலே உணவுண்டு  தருப்பையில் உறங்க வேண்டும். மற்றைநாள் காலையில் சிவபெருமானைத் தேவியோடு தாபித்திருந்த பொற்கலசத்துடன்,  பிறபொருட்களையும் தானமாகப் பிராமணருக்கு ஈந்து, வணங்கிச் சிவனடியாருடன் பாரணை செய்யின் எண்ணிய வரங்களையடைவர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar