பதிவு செய்த நாள்
30
மார்
2018
12:03
தரமணி : பங்குனி உத்திரத்தையொட்டி, பக்த ஆஞ்சநேய சுவாமி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், இன்று(மார்ச் 30) திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
தரமணி, ராஜாஜி தெருவில் உள்ளது, பக்த ஆஞ்ச நேய சுவாமி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்.அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவிலில், 1980 முதல், ஆண்டு தோறும், பங்குனி உத்திரத்தையொட்டி, திருக்கல்யாண வைபோகம் நடைபெற்று வருகிறது. இந்தாண்டு, பங்குனி உத்திர விழா, இன்று (மார்ச் 30) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பக்த ஆஞ்சநேய சுவாமி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், மதியம், 2:30 - 5:00 மணிக்குள், திருக்கல்யாண உற்சவமும்; இரவு, 8:00 மணிக்கு, கண்ணாடி சேவையும் நடைபெறும்.