பதிவு செய்த நாள்
30
மார்
2018
04:03
ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி அருகே, எஸ்.பாப்பாரப்பட்டி, ராஜவீதி, மாதேஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம், இன்று(மார்ச் 30) நடக்கிறது. அதையொட்டி, (மார்ச் 29) காலை, கணபதி யாகத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, லட்சுமி ஹயக்ரீவ, சுதர்சன, லட்சுமி குபேர யாகம், வாஸ்து பூஜை நடந்தது. புனித தீர்த்தம் எடுத்துவர, (மார்ச் 28) இரவு, சித்தர்கோவில் ஊற்றுக்கிண ற்றுக்கு சென்ற பக்தர்கள், (மார்ச் 29) அதிகாலை, ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோவி லுக்கு வந்து, குடங்களை வைத்து பூஜை செய்தனர். மாலை, அங்கிருந்து குடங்களை எடுத்து, மேள, தாளம் முழங்க, மாதேஸ்வரன் கோவிலுக்கு ஊர்வலம் சென்றனர். இரவு, கோபுரத்துக்கு கலசம் வைத்தல், மூலவர் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இன்று(மார்ச் 30) காலை, 8:00 மணிக்கு, கும்பாபிஷேகம் நடக்கிறது.