பதிவு செய்த நாள்
30
மார்
2018
04:03
சேலம்: கோவில் யானைக்கு, சென்னை மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர். சேலம், சுகவனேஸ் வரர் கோவில் யானை ராஜேஸ்வரி உடல்நலம் பாதிக்கப்பட்டதால், கோரிமேட்டிலுள்ள கோவில் நிலத்தில் பராமரிக்கப்படுகிறது. கடந்த, 25 நாளாக, உடல்நலம் மோசமாகி, படுத்தபடி உள்ள யானைக்கு, சேலம் கால்நடைத்துறை சார்பில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. முன்னேற்றம் இல்லாததால், நேற்று, சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரியை சேர்ந்த, வனவிலங்கு சிறப்பு பேராசிரியர் பழனிவேல்ராஜன், சிகிச்சையியல் துறை பேராசிரியர் கோபாலகிருஷ்ணன் அடங்கி ய மருத்துவக்குழுவினர், யானையை பார்வையிட்டனர். அப்போது, 20 லிட்டர் குளுக்கோஸ், முலாம்பழம், தர்பூசணி, இளநீர், பச்சை தென்னங்கீற்று ஆகியவை, யானைக்கு வழங்கினர். தொடர்ந்து, மேற்கொண்டு வழங்க வேண்டிய சிகிச்சை குறித்து, சேலம் டாக்டர்களுக்கு விளக் கினர்.