Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விழா கோலம் பூண்டது அயோத்தி; ... தர்ம சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்; ஆனந்தவனம் பாரதி சுவாமிகள் தர்ம சிந்தனையை வளர்த்துக் கொள்ள ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோமுக்தீஸ்வரர் கோவில் தியாகராஜ சுவாமி புதிய தேர் திருப்பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
கோமுக்தீஸ்வரர் கோவில் தியாகராஜ சுவாமி புதிய தேர்  திருப்பணி துவக்கம்

பதிவு செய்த நாள்

24 நவ
2025
12:11

மயிலாடுதுறை;  திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவில் தியாகராஜ சுவாமி புதிய தேர்  திருப்பணியை குருமகா சன்னிதானம்  பூஜைகள் செய்து தொடங்கி வைத்தார்.


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறையில் 14 ஆம் நூற்றாண்டில் ஆதீன குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகளால்  தோற்றுவிக்கப்பட்ட சைவ ஆதீன திருமடம் உள்ளது. தமிழ் மொழி, கலாச்சாரம், சைவ சித்தாந்தத்தை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றும் இந்த ஆதீனத்திற்கு சொந்தமான கோவில்களில் ஒன்றாக திருவாவடுதுறை கோமுத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களில் ஒன்றான இக்கோவிலில் தியாகராஜ சுவாமி தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.  தியாகராஜ சுவாமி புதிய தேர் திருப்பணி தொடக்க விழா நடந்தது. கோமுத்தீஸ்வரர் கோவில் கொடிமரம் முன்பு  திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியா சுவாமிகள் திருமுன்னர்  சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்ய தேர் திருப்பணியை குருமகா சன்னிதானம் தொடங்கி வைத்தார். புதிதாக செய்யப்படும் தேர் 22 அடி அகலமும், சுவாமி சிம்மாசனம் வரை 22 அடி உயரமும் உடையது. இந்த தேர் திருப்பணியை ஸ்ரீலஸ்ரீ  குருமகா சன்னிதானம் அருளானையின் வண்ணம் கோவை அரண் பணி அறக்கட்டளை உபயமாக செய்து கொடுக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar