சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூரில் பங்குனி உத்திர திருவிழா நேற்று (மார்ச் 29) நடந்தது.
சங்கராபுரம் காட்டுவனஞ்சூரில் உள்ள பாலமுருகன் கோவிலில், விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
பின், சக்தி அழைத்து பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக தேர் இழுத்து வந்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
திருவிழா ஏற்பாடுகளை காட்டுவனஞ்சூர் பொது மக்கள் செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.