பதிவு செய்த நாள்
31
மார்
2018
10:03
சபரிமலை: சபரிமலை அய்யப்பனுக்கு, மார்ச் 30ல் பம்பையில் பங்குனி உத்திர ஆராட்டு நடந் தது. கேரளாவில் உள்ள, பிரசித்தி பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 நாள் நடக்கும் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா, மார்ச், 21-ல் துவங்கியது. மார்ச் 30ல் அதிகாலை நடை திறந் ததும், கோவிலுக்குள் சுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து, நெய் அபிஷேகம் நடந்தது.
காலையில் சுவாமி, பம்பைக்கு புறப்பட்டார்.மதியம், பம்பையில் ஆராட்டு நடந்தது. கணபதி கோவில் முன், சுவாமி சிலை தரிசனத்துக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து, ஆராட்டு பவன, சன்னிதானத்துக்கு புறப்பட்டது. இரவில் சன்னிதானம் வந்ததும், கொடி இறக்கப்பட்டு, விழா நிறைவு அடைந்தது. இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.சரிந்த யானைகொல்லம் மாவட்டம், பன்மனை கோவிலுக்கு சொந்தமான, சரவணன் யானை, சுவாமியை சுமந்து, சன்னிதானத்தில் இருந்து பம்பைக்கு வந்தது. அப்பாச்சிமேட்டில் கடும் வெப்பத்தில், யானை தளர்ச்சி அடைந்தது. செங்குத்தான இறக்கத்தில் வந்த போது, கால் இடறி சரிந்தது.இதனால், சிலையுடன் யானை மீது அமர்ந்திருந்த பூஜாரி வினீத்குமார், கீழே விழுந்தார். சாந்தப்படுத்த முயன்ற பாகன் கிரீஷ்குமாரை, யானை தள்ளிவிட்டது. இதில், அவரது கால் முறிந்தது. பின், யானை அங்கிருந்து ஓடி, காட்டுக்குள் சென்று நின்றது. இந்த களேபரத்தில், தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட, 11 பேர் காயம் அடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். யானை அமைதியான பின், அங்கேயே நிறுத்தப்பட்டது. சுவாமியை பூஜாரிகள் சுமந்து, பம்பை கொண்டு சென்றனர். ஆராட்டு முடிந்த பின், மீண்டும் சன்னிதானத்திற்கு சுமந்து சென்றனர்.