பதிவு செய்த நாள்
31
மார்
2018
05:03
ஓசூர்: ஓசூரில் இருந்து, திருப்பதிக்கு, அரசு பஸ் சேவை நிறுத்தப்பட்டதால், பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஆந்திர மாநில முதல்வராக, என்.டி.ராமாராவ் இருந்த போது, ஆந்திர மாநில போக்குவர த்துத்துறை சார்பில், ஓசூரில் இருந்து, திருமலை திருப்பதிக்கு, நான்கு பஸ்களும், தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள, குப்பத்திற்கு, இரு பஸ்களும், இயங்கப்பட்டன. பயணிகள் கூட்டமில்லாததை காரணம் காட்டி, திருப்பதி சென்ற, நான்கு பஸ்களையும், கடந்த ஆண்டு, ஜூலை, 1ல், ஆந்திர மாநில போக்குவரத்துத்துறை நிறுத்தியது. ஓசூரில் இருந்து, கிருஷ் ணகிரி சென்று, அங்கிருந்து, திருப்பதிக்கு, செல்ல வேண்டிய நிலைக்கு, பக்தர்கள் தள்ளப் பட்டனர். கடந்த, பிப்., 17, முதல், கிருஷ்ணகிரியில் இருந்து, திருப்பதிக்கு சென்று வந்த, தமிழக அரசு பஸ், ஓசூர் வரை நீட்டிக்கப்பட்டு, தினமும், காலை, 5:30 மணிக்கு, ஓசூரில் இருந்தும், மதியம், 2:15க்கு, திருப்பதியில் இருந்தும், இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஓசூரில் இருந்து, திருப்பதிக்கு இயக்கப்பட்ட தமிழக அரசின் பஸ் சேவை, கூட்டமில்லாததைக் காரணம் காட்டி, சமீபத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. ஓசூரில் இருந்து, திருப்பதிக்கு பஸ் இயக்க ப்படுவதாக நினைத்து, வரும் பக்தர்களுக்கு, ஏமாற்றமே மிஞ்சுகிறது. வாரத்திற்கு, ஒன்று அல்லது, இரண்டு நாட்களாவது, ஓசூரில் இருந்து, திருப்பதிக்கு, பஸ் சேவை துவங்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.