பதிவு செய்த நாள்
31
மார்
2018
05:03
தர்மபுரி: தர்மபுரி அடுத்த அன்னசாகரத்தில், விநாயகர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திரத்தை யொட்டி தேரோட்டம் நடந்தது. தர்மபுரி அடுத்த அன்னசாகரம், விநாயகர், சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி, கடந்த, 24ல் கொடியேற்றத் துடன் விழா துவங்கியது. ஒன்பது நாட்கள் நடக்கும் விழாவில், சிவசுப்பிரமணிய சுவாமிக்கு, அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடந்தன. முக்கிய நாளான நேற்று (மார்ச் 30)ல் பிற்பகல், 12:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, உற்சவ மூர்த்தி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வள்ளி, தெய்வானையுடன், தேரில் வலம் வந்தார். இதில், திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். இதேபோல், காரிமங்கலம் அடுத்த உச்சம்பட்டி முத்தமிழ் முருகன் கோவிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கடந்த, 26ல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. (மார்ச் 30)ல் காலை, 11:00 மணிக்கு பக்தர்கள் காவடி எடுத்து, முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்றனர்.