பதிவு செய்த நாள்
31
மார்
2018
05:03
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம், நேற்று (மார்ச் 30)ல் விமரிசையாக நடந்தது.
விழா, மார்ச், 24ல் துவங்கியது. அன்று முதல், 29ம் தேதி வரை, தினமும், மாலை, 5:30 மணிக்கு, கண்ணாடி அறையில் இருந்து, பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீமலையாள நாச்சியாருடன் திருவடிகோவில் புறப்பாடு நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து, திருவடிகோவிலில் இருந்து மீண்டும், திருக்கோவில் நூற்றுக்கால் மண்டபத்தை வந்தடைந்து, அங்கு ஊஞ்சல் உற்சவம், ஆராதனம், தீர்த்த சடாரி வினியோகம் நடந்தது.
பங்குனி உத்திர நாளான நேற்று (மார்ச் 30)ல் காலை, 9:00 மணிக்கு பெருமாள், தாயார், மலை யாள நாச்சியாருக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை, 5:30 மணிக்கு, ஸ்ரீபெருமாள், உபயநாச் சியார், தாயார், புறப்பாடு ஆகி, திருக்கோவில், நான்கு கால் மண்டபத்தில், மாலை, மாற்றுதல் நடந்தது.
அதனைத்தொடர்ந்து, கண்ணாடி அறையில், தரிசன தாம்பூலமாகி, தாயார் சன்னதிக்கு வந்த டைந்தார். அங்கு ஸ்ரீபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார், மலையாள நாச்சியார், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீபெருந்தேவி தாயார் ஆகியோருடன் சேர்த்தி அறை சேவை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.