பதிவு செய்த நாள்
02
ஏப்
2018
01:04
ராமநாதபுரம்: ஏசு உயிர்த்தெழுந்த தினம் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சர்ச்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ராமநாதபுரம் புனித ஜெபமாலை சர்ச்சில் இரவு 12:00 மணியளவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தென்னிந்திய திருச்சபை சர்ச்சில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. சிக்கல் அருகே சிறைக்குளம் புனித பேதுரு சர்ச், ஆர்.எஸ்.மங்கலம்,காக்கூரணி புனித இருதய ஆண்டவர் சர்ச், சாயல்குடி,மடத்தக்குளம் தென்னிந்திய திருச்சபை சர்ச், தேரிருவேலி, கர்மல் பகுதியில் உள்ள டி.எல்.சி., சர்ச், கீழத்துாவல், திருவரங்கம் புனித இருதய சர்ச், கடலாடி கருங்குளம், தென்னிந்திய திருச்சபை சர்ச், இளசெம்பூர், வீராம்பல் பகுதியில் உள்ள தென்னிந்திய திருச்சபை சர்ச் ஆகிய இடங்களில் இரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பல இடங்களில் கலை நிகழ்ச்சிகளும், அன்னதானம் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சிகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
திருவாடானை: தொண்டி அருகே காரங்காடு துாய செங்கோல் அன்னை ஆலயத்தில் உயிர்ப்பு பெருவிழா நடந்தது. பாதிரியார் சாமிநாதன்தலைமையில் நடந்த சிறப்பு திருப்பலியில் காரங்காடு பங்குமக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆலயம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருந்தது.