பதிவு செய்த நாள்
02
ஏப்
2018
01:04
நாமக்கல்: ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை, ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள், ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், நேற்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, அதிகாலையில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதேபோல், நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள, கிறிஸ்து அரசர் தேவாலயத்தில், பாதிரியார் பிரான்சிஸ் தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது. அதேபோல், நேற்று காலை கணேசபுரம் சி.எஸ்.ஐ., சர்ச், தமிழ் பாப்தீஸ்து திருச்சபை, அசெம்பளி ஆப்காட் திருச்சபை போன்றவற்றில் ஈஸ்டர் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள், புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் உள்ள தேவாலயங்களில், நேற்று ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.