பதிவு செய்த நாள்
05
ஜன
2012
11:01
பாவூர்சத்திரம்:அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோயில் திருவிழா வரும் 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு 49வது திருவிழா வரும் 8ம் தேதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகின்றது. வில்லிசை, மேளத்துடன் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. திருவிழா நாட்களில் தினமும் மதியம், இரவு வில்லிசை, மேளம் சிறப்பு பூஜை நடக்கிறது.ஆறாம் திருநாளில் அம்மன் சப்பரத்தில் மகிழ்வண்ணநாதபுரம் சென்று வருகின்றது. 7ம் நாளில் அம்மன் சப்பரத்தில் பெத்தநாடார்பட்டி, பொட்டலூர் சென்று வருகின்றது. 8ம் நாளில் அம்மன் சப்பரத்தில் நவநீதகிருஷ்ணபுரம், இலங்காபுரிபட்டணம் சென்று வருகின்றது. 9ம் நாளில் அம்மன் சப்பரத்தில் நாகல்குளம் சென்று வருகின்றது. திருவிழா நிறைவு நாளில் காலை முதல் இரவு முழுவதும் 10 வில்லிசை குழுவினர், 3 மேள குழுவினர், இரு பேண்ட் வாத்தியத்துடன் மகுட ஆட்டம், கணில் ஆட்டம்,சென்டாமேளம், பக்தி இன்னிசை, மெல்லிசை கச்சேரி நடக்கிறது. இரவு 12 மணிக்கு அருணாப்பேரியில் முக்கிய வீதிகளில் சப்பரம் வீதிஉலா சென்று அம்மன் இருப்பிடம் செல்கிறது. அதிகாலை 3 மணிக்கு பூக்குழி இறங்குதல், வாணவேடிக்கை நடக்கிறது. மதியம் 12 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.திருவிழா ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா சிவன்பாண்டி செய்து வருகின்றார்.