மதுரை,மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டத்திற்காக சுவாமி, அம்மன் தேர்களை பராமரித்து வர்ணம் பூசும் பணி துவங்கியுள்ளது.ஏப்.,18 காலை 10:05 மணிக்கு மேல் 10:29 மணிக்குள் கொடியேற்றம், 25ல் இரவு 7:40 மணிக்கு மேல் இரவு 8:04 மணிக்குள் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், 26ல் திக் விஜயம், 27ல் காலை 9:05 மணிக்கு மேல் 9:29 மணிக்குள் மீனாட்சி அம்மன் சொக்கநாதர் திருக்கல்யாணம், 28ம் தேதி காலை 6:30 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம் நடக்கிறது.தேர்கள் பராமரிப்புபெயின்டர் கண்ணன் கூறியதாவது: தேர்களை பராமரித்து வர்ணம் பூசும் பணி துவங்கியுள்ளது. படிந்துள்ள தூசிகளை காற்றுஅழுத்தம் மூலம் அகற்றப்படும். தேர் ஒன்றுக்கு 75 லிட்டர் வார்னிஷ், 50 லிட்டர் தின்னர் மூலம் அழகுபடுத்தப்படும். நான்கு சக்கரங்களில் கிரீஸ் வைக்கப்படும். ஐந்து நாட்கள் இப்பணி நடக்கும். பின் அலங்காரப் பணி துவங்கும், என்றார்.