பதிவு செய்த நாள்
13
ஏப்
2018
11:04
மதுரை, மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்காக 20 இடங்கள், கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்காக 10 இடங்களில் எல்.இ.டி., திரைகள் வைக்கப்படும் என கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.
இத்திருவிழா சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்த ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:
கள்ளழகர் அழகர்கோவிலிருந்து வண்டியூர் செல்லும் வரை 435 திருக்கண் மண்டபங்களில் எழுந்தருள்கிறார். இங்கு பந்தல்களை தகரத்தினால் கூரை வேயப்பட வேண்டும். ஏப்., 30 கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவாறு துறை அலுவலர்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாசி வீதிகளில் தேரோட்டம் சீராக நடக்க ரோடுகளை மாநகராட்சி, பொதுப்பணி, நெடுஞ்சாலை, மின்துறையினர் இணைந்து சீரமைக்க வேண்டும், என்றார். எஸ்.பி., மணிவண்ணன், மீனாட்சி கோயில் இணை கமிஷனர் நடராஜன், கள்ளழகர் கோயில் துணை கமிஷனர் மாரிமுத்து, ஆர்.டி.ஓ.,க்கள் அரவிந்தன், சிவகாமி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.