பதிவு செய்த நாள்
16
ஏப்
2018
03:04
திருத்தணி: திரவுபதியம்மன் கோவிலில், இந்தாண்டிற்கான தீமிதி திருவிழா, வரும், 19ம் தேதி, அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம், 6ம் தேதி தீமிதி திருவிழா நடைபெறுகிறது. திருத்தணி, பழைய தர்ம ராஜா கோவில் தெருவில் உள்ள புராதன திரவுபதியம்மன் கோவிலில். இந்தாண்டிற்கான தீமிதி திருவிழா, வரும், 19ம் தேதி, அதிகாலை, 5:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. காலை, 8:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சந்தன காப்பும், மாலை, 6:00 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடக்கிறது. தினமும், பிற்பகல், 1:30 மணி முதல், மாலை, 5:30 மணி வரை நடைபெறுகிறது. வரும், 23ம் தேதி முதல், மே மாதம், 6ம் தேதி வரை, இரவு, 10:00 மணிக்கு, மகாபாரத நாடகம் நடைபெறும். வரும், 25ம் தேதி, திரவுபதியம்மன் திருக்கல்யாணம், 27ம் தேதி, சுபத்திரை திருக்கல்யாணம், திருவிளக்கு பூஜை மற்றும் புஷ்ப பல்லக்கு, மே, 6ம் தேதி, துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி திருவிழா நடக்கிறது.