பதிவு செய்த நாள்
16
ஏப்
2018
03:04
திருக்கழுக்குன்றம்; வேதகிரீஸ்வரர் கோவில் உண்டியல்களில், 11.15 லட்சம் ரூபாய், பக்தர்களின் காணிக்கையாக கிடைத்துள்ளது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, உண்டியல் காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். அதுபோல, கோவிலில் உள்ள நிரந்தர உண்டியல்கள் மற்றும் திருப்பணி உண்டியல்கள் சேர்த்து, மொத்தம், 12 உண்டியல்கள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டன. கோவில் உண்டியல்கள், காஞ்சிபுரம் உதவி ஆணையர், ரமணி மற்றும் கோவில் செயல் அலுவலர், குமரன், ஆய்வாளர், கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. அதில், 11.15 லட்சம் ரூபாய், 88 கிராம் தங்கம் மற்றும், 92 கிராம் வெள்ளியும், பக்தர்கள் காணிக்கையாக கிடைத்துள்ளது.