பதிவு செய்த நாள்
16
ஏப்
2018
03:04
திருக்கழுக்குன்றம்: வேதகிரீஸ்வரர் கோவிலில், பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் இரவு நடந்தது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும், சித்திரை மாத முதல் நாள், தமிழ் புத்தாண்டை ஒட்டி, பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெறும். அந்த வகையில், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, தாழக்கோவிலான பக்தவத்சலேஸ்வரர் கோவிலில் பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், கோவில் மேலாளர், விஜயன், சிவாச்சாரியார்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.