பதிவு செய்த நாள்
18
ஏப்
2018
03:04
பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். நடப்பாண்டு விழா, வரும், 21ல், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சி நடக்கிறது. 25ல், மாலை, 5:00 மணிக்கு, சங்கமேஸ்வரர் ரிஷப வாகனத்திலும், பெருமாள் கருட வாகனத்திலும், 63 நாயன்மார்கள், 51 பல்லக்குகளில் திருவீதி உலாவும் நடக்கிறது. முக்கிய நிகழ்வான ஆதிகேசவ பெருமாள் திருத்தேர் வடம் பிடித்தல், 28ல் நடக்கிறது. சங்கமேஸ்வரர் திருத்தேர் வடம் பிடித்தல், 29ல் நடக்கிறது. மே, 2ல், மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.