அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2026 10:04
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் பங்குனி மாத பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்களும், கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனாக செலுத்துவதற்கு கிரிவலப்பாதை மற்றும் கோவில் வளாகத்தில் காணிக்கை உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. உண்டியல் மாதந்தோறும் பவுர்ணமி முடிந்தவுடன் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர். அதில் காணிக்கையாக, 5 கோடியே 44 லட்சத்து 37 ஆயிரத்து 70 ரூபாய் மற்றும் தங்க நகை, 225 கிராம், வெள்ளி நகை, 2.750 கிராம் பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.