அனுப்பர்பாளையம் : இந்து முன்னணி, திருமுருகன்பூண்டி கிளை சார்பில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, அண்ணா நகர் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. திருமுருகநாதசுவாமி கோவிலில் இருந்து, தீர்த்த குடம், பால் குடம் எடுத்து வரப்பட்டது; சிறப்பு பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் ரமேஷ் மற்றும் ஊர் பொது மக்கள் பங்கேற்றனர்.