பதிவு செய்த நாள்
19
ஏப்
2018
01:04
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலின், சித்திரை பெருவிழா, நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை பெருவிழா, நாளை காலை, 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முன்னதாக, இன்று இரவு, 10:00 மணிக்கு விநாயகர் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடக்கிறது. பிரதான விழா, வரும், 22 காலை, 6:00 மணிக்கு வெள்ளி அதிகாரநந்தி மலைவலம் மற்றும் 63 நாயன்மார்கள் மலைவலம் உற்சவமும், 26 காலை, 6:00 மணிக்கு பஞ்சரத உற்சவமான, ஐந்து திருத்தேர் வீதிஉலா புறப்பாடும் நடைபெறுகிறது. வரும், 30ல், பஞ்ச மூர்த்திகள் உச்சி கால மஹா அபிஷேகம், நுாதன விமானம் மற்றும் பந்தம்பறி உற்சவத்துடன் பெருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை, செயல் அலுவலர், குமரன் தலைமையிலான குழுவினர் செய்துள்ளனர்.