நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா நேற்று நடந்தது. நெட்டப்பாக்கம் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா, கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று பகல் 12 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 17ம் தேதி பக்காசூரனுக்கு சோறு படைத்தல் நிகழ்ச்சியும், 18ம் தேதி திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று மாலை 6 மணிக்கு நடந்தது. இதில் பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.