ஊத்துக்கோட்டை: ஸ்ரீசந்தான வேணுகோபால சுவாமி கோவிலில் நடந்த கும்பாபிேஷக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர். ஊத்துக்கோட்டை, தட்டாரத் தெருவில், சந்தான வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது. இதனால் பக்தர்கள் பங்களிப்புடன் கோவிலை சீரமைக்கும் பணிகள் நடந்தது. பணிகள் நிறைவடைந்து நேற்று காலை, 8:45 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி தரிசனம், பிரசாதம் வழங்கப்பட்டது. பகல், 3:00 மணிக்கு சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் பஜனைக் குழுவினர், திருவீதி உலா வந்தனர்.