ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏப்., 30 ல் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்கு மாற்றாக மே 12 சனிக்கிழமை பணி நாளாக கருதப்பட்டு அனைத்து அலுவலகங்களும் செயல்படும் என்று கலெக்டர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.