பதிவு செய்த நாள்
25
ஏப்
2018
12:04
பொன்விளைந்தகளத்துார்: பள்ளவீரகுப்பம் கிராமத்தில், எல்லையம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. திருக்கழுக்குன்றம் அடுத்த, பள்ளவீரகுப்பம் கிராமத்தில், எல்லையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணி, ஜன., துவங்கி, சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது. நேற்று முன்தினம், கர்த்தா சங்கல்பம், விநாயகர் பூஜை உட்பட, பல பூஜைகளுடன், கும்பாபிஷேக விழா துவங்கியது. அதிகாலை, 5:00 மணிக்கு, யாக பூஜையும், காலை, 7:00 மணிக்கு, கலசங்கள் புறப்பாடும் நடந்தது. பின், 7:30 மணிக்கு, எல்லையம்மன்னுக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர்.