பதிவு செய்த நாள்
25
ஏப்
2018
01:04
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியில், சோமசுந்தர் திருக்கோவில், சுயம்பு மாரியம்மன் கோவில் பழுதடைந்து இருந்தது. பழமையான கோவிலை, காளிங்கராயர் ஜமீன் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் நிதியுதவியில் திருப்பணி செய்து புனரமைக்கப்பட்டுள்ளது. கோவிலில், சுயம்பு மாரியம்மனுடன், சமயபுரம் மாரியம்மனையும் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. கும்பாபிேஷக விழா, வரும், 28ம் தேதி மாலை, 6:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, முதல் கால ேஹாமம் உள்ளிட்ட பூஜைகளுடன் துவங்குகிறது. வரும், 29ம் தேதி காலை, 7:30 முதல், 9:00 மணி வரை, இரண்டாம் கால ேஹாமம், தீபாராதனை, அன்னதானம் நிகழ்ச்சியும்; மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை மூன்றாம் கால ேஹாமம், திரவியாகுதி, மகாபூர்ணாகுதி பூஜைகள் நடக்கிறது. வரும், 30ம் தேதி காலை, 5:00 மணிக்கு, நான்காம் கால ேஹாமம், காலை, 6:05 முதல், 6:55 மணி வரை மகா கும்பாபிேஷகம், காலை, 7:00 மணிக்கு மாரியம்மனுக்கு பரிவார சகிதம், மகா அபிேஷகம், தச தரிசனம், தச தானம், தீர்த்த பிரசாதம் வழங்குதல் மற்றும் அன்னதானம் நடக்கிறது.