பதிவு செய்த நாள்
25
ஏப்
2018
12:04
திருப்பூர்:திருப்பூர், ஸ்ரீ சத்யசாய் ஆன்மிக மையத்தில், ஸ்ரீ சத்ய சாய்பாபா மகா ஆராதனா தினம், நேற்று நடந்தது.காலை, சிறப்பு ேஹாம பூஜை, கொடியேற்றம், சிறப்பு பஜனை, ஓம்ஹாரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனம் மற்றும் பஜனைகள் நடந்தன. பாலவிகாஸ் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்ற, சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்களின் மாவட்ட தலைவர் சிவசுப்ரமணியம் கூறுகையில், ராம்நகர், காந்திநகர், அமராவதிபாளையம், செட்டிபாளையம் பகுதிகளில், ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதிகள் மற்றும் ஆன்மிக மையம் சார்பில், நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. இவை, கோடை காலம் முடியும் வரை செயல்படும், என்றார்.