தேனி, தேனி பங்களாமேடு மீனாட்சி சுத்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழாவில் இன்று மீனாட்சி திக்விஜயம், பூபல்லக்கு, நாளை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் நடக்க உள்ளது. இக் கோயிலில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. நேற்று மாலை 5:00 மணிக்கு மீனாட்சிக்கு பட்டாபிஷகேம் வழங்கும் நிகழ்வு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று மீனாட்சி திக்விஜயமும், பூபல்லக்கு பவனியும் நடக்க உள்ளது. முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் நடக்க உள்ளது. அதனைத் தொடர்ந்து மொய் விருந்து, இரவு யானை வாகன நகர்வலமும் நடக்கிறது. ஏப்., 28ல் தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.