பதிவு செய்த நாள்
27
ஏப்
2018
01:04
கோவை : முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா, மே 1ல் துவங்குகிறது. போத்தனுார், கணேசபுரத்தில் அமைந்துள்ளது, முத்து மாரியம்மன் கோவில். கோவிலில் சித்திரை திருவிழா, மே 1ம் தேதி காலை, 7:30 மணிக்கு, விநாயகர் வழிபாடுடன் துவங்குகிறது. 7:45 மணிக்கு, விழா கொடி ஏற்றப்படுகிறது. இரவு, 8:00 மணிக்கு, மூராண்டம்மன் கோவிலில் இருந்து, கம்பம் அழைத்து வரப்பட்டு நடப்படுகிறது. மே 2ம் தேதி முதல் 7ம் தேதி வரை, தினமும் இரவு, 7:00 மணிக்கு, கொலு பூஜை, பக்தர்கள் பூவோடு எடுத்து ஆடுதல் நடக்கிறது; அன்னதானம் வழங்கப்படுகிறது. மே 4ம் தேதி மாலை, 4:30 மணிக்கு, திருவிளக்கு வழிபாடும், 8ம் தேதி இரவு, 8:30 மணிக்கு, அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. இத்திருவிழா, மே 13ம் தேதி மதியம், 12:00 மணிக்கு, கருப்பராயன் பூஜையுடன் நிறைவடைகிறது.