மானாமதுரை, மானாமதுரையில் ஆற்றில் அழகர் இறங்கும் திருவிழாவிற்கு மறுநாள் இரவு சித்ரா பவுர்ணமி நிலவொளியில் மானாமதுரை,சு ற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வீடுகளில் சமைத்த உணவை கொண்டு வந்து உறவினர்களோடுஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது வழக்கம். நேற்றும் அந்த விழா நடந்தது. இளையான்குடி ஜெயப்பிரகாஷ்,42,கூறியதாவது: வருடந்தோறும் ஆற்றில் அழகர் இறங்கும் திருவிழாவிற்காக மானாமதுரையிலுள்ள உறவினர் வீட்டிற்கு குடும்பத்தோடு வருவேன்வீட்டில் சமைத்த உணவை கொண்டு வந்து உறவினர்களோடு ஆற்றில் அமர்ந்து சாப்பிடும் போது ஒருவித மகிழ்ச்சி ஏற்படுகிறது. அனைத்து மதத்தினரும்இங்கு வருவதை பார்க்க முடிகிறது, என்றார்.