பரமக்குடி, பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளித்தார். இக்கோயிலில் அழகர் ஏப். 30 ல் அதிகாலை 3:55 மணிக்கு பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார். தொடர்ந்து காலை 9:15 மணிக்கு குதிரை வாகனத்தில் அலங்காரமாகி காக்காதோப்பு பெருமாள் கோயிலை அடைந்தார். நேற்று மாலை 5:00 மணிக்கு காக்காதோப்பில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்ட கள்ளழகர் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் வழங்கினார். தொடர்ந்து இரவு முழுவதும் விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சி நடந்தது.