மஞ்சூர்: மஞ்சக்கம்பை ெஹத்தையம்மன் கோவிலில் நடந்த குண்டம் திருவிழாவில் திரளான பக்தர்கள் குண்டம் இறங்கிநேர்த்தி கடன் செலுத்தினர். மஞ்சூர் அடுத்துள்ள மஞ்சக்கம்பையில், மானிஹாடா ெஹத்தையம்மன் சத்திய நாகராஜர் கோவில் உள்ளது. நடப்பாண்டு பூ குண்டம் திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் சிறப்பு பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று, காலை, 8:00 மணிக்கு கணபதி பூஜை, 9:00 மணிக்கு அய்யப்பனுக்கு அபிேஷகம், அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ ெஹத்தையம்மனுக்கு அபிேஷகப் பூஜை நடந்தது. 10:00 மணிக்கு நாகராஜருக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து, மதியம், 2:30 மணிக்கு நடந்த பூ குண்டம் நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பூ குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். விழாவில் ஆன்மிக சொற்பொழிவுகள், படுகர் கலாசார நடனம், இன்னிசை கச்சேரி நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.