பதிவு செய்த நாள்
03
மே
2018
01:05
மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவம், நேற்று நிறைவடைந்தது. இக்கோவிலில், கடந்த, 23ல், சித்திரை பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் துவங்கி, தினமும் காலை, இரவு திருமஞ்சனம், உற்சவங்கள்; 27ல் கருடசேவை, 29ல் திருத்தேர் ஆகியவை நடந்தன. நேற்று முன்தினம் மாலை, சக்கரத்தாழ்வாருடன், நவசந்தி முடிந்து, இரவு, சந்திரபிரபை வாகனத்தில், சுவாமி வீதியுலா சென்றார். கோவில் திரும்பியதும், சன்னதியில் எழுந்தருளி, நாலாயிர திவ்ய பிரபந்த சேவையாற்றிய பிள்ளைலோக ஜீயர் பரம்பரையினருக்கு, நிர்வாகம் நன்றி தெரிவித்து, கொடியிறக்கப்பட்டது. நேற்று, 12 திரு ஆராதனங்கள், சுவாமி தோஷ நிவர்த்தி புஷ்பயாகம், திருவாய்மொழி, திவ்ய பிரபந்த, வேத மந்திர சேவையை தொடர்ந்து, பிரம்மோற்சவம் நிறைவடைந்தது. இன்று துவங்கி, நாளை மறுநாள் வரை, தினமும் மாலை, 5:00 மணிக்கு, விடையாற்றி உற்சவம் நடக்கிறது.