நெட்டப்பாக்கம்: ஏரிப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில், அர்ச்சுன மகாராஜா , திரவுபதியம்மன் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. காலை 6.00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், 8.00 மணிக்கு சீர்வரிசை கொண்டுவருதல், 9.00 மணிக்கு பூமாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. காலை 10.30 மணிக்கு அர்ச்சுன மகாராஜா, திரவுபதி திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்களுக்கு அறுசுவை உணவு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏரிப்பாக்கம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.