இடைப்பாடி திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஆலோசனை கூட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2018 12:05
இடைப்பாடி: இடைப்பாடி, தர்மராஜர் திரவுபதியம்மன் கோவில் கட்டடம் சேதமடைந்தது. இதையடுத்து, ஊர் முக்கிய பிரமுகர்களால் குழு அமைக்கப்பட்டு, எட்டு ஆண்டுகளுக்கு மேலாக, கோபுர பணி நடந்துவந்தது. அக்குழுவினர் சிலரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கோவில் கட்டட பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில், ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில், கோவில் கட்டுமானப் பணியை உடனே தொடங்க வேண்டும்; கும்பாபிஷேகத்தை, ஏற்கனவே இருந்த குழுவே நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.