பதிவு செய்த நாள்
04
மே
2018
12:05
அந்தியூர்: அந்தியூர் பத்ர காளியம்மன் கோவிலில், மாதம் தோறும் உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது. கோவிலில் வைக்கப்பட்டுள்ள நிரந்தர உண்டியல் ஐந்து, தற்காலிக உண்டியல் மூன்று, திருவிழா உண்டியல் ஆறு என, 14 உண்டியல்களை திறந்து, காணிக்கை எண்ணும் பணி நேற்று (மே 3)ல் நடந்தது. இதில் ஐந்து லட்சத்து 51 ஆயிரத்து, 181 ரூபாய், தங்கம், 82.500 கிராம், வெள்ளி, 203 கிராம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. அதிகாரிகள் முன்னிலையில், விவேகானந்தா பள்ளி மாணவர்கள், துர்கா பூஜை மகளிர் குழுவினர், கே.வி.பி., வங்கி ஊழியர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.