ஸ்ரீவை., சிவன் கோயில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பக்தர்கள் கோரிக்கை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜன 2012 10:01
ஸ்ரீவைகுண்டம்:ஸ்ரீவை., சிவன் கோயிலில் ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டுகளாக சம்பளம் வழங்கவில்லை. அரசு உடனே சம்பளம் வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நவகைலாயங்களில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோயிலில் அர்ச்சகர்கள், வாட்ச்மேன்கள், பல வேலைகாரர் மடப்பள்ளி என பல ஊழியர்கள் வேலைபார்த்து வருகின்றனர் இந்த ஊழியர்களுக்கு சுமார் 5 ஆண்டுகளாக சம்பளம் வழங்காததால் விரக்தி அடைந்துள்ளனர். இவர்களுக்கு சம்பளமாக ரூ.200, ரூ.300, ரூ.400 என மிக சொற்பமான தொகையே இருந்தாலும் இதனை பல ஆண்டுகள் வழங்காததால் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். தற்போது தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசு கோயில்களின் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ளது. கோயில்களில் அன்றாட பூஜை, துப்பரவு போன்ற அத்யாவசிய பணிகள் செய்யும் இதுபோன்ற அடிப்படை பணியாளர்களுக்கு உடனடியாக சம்பளத்தை வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.