நெல்லையப்பர் கோயிலில் பத்ர தீபம் திருவிழா வரும் 20ம் தேதி துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜன 2012 10:01
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் தை அமாவாசை பத்ர தீபத் திருவிழா (20ம் தேதி) துவங்குகிறது.நெல்லையப்பர் கோயிலில் தை அமாவாசை பத்ர தீபத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வரும் 20ம் தேதி துவங்கி 22ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. 3 நாட்களிலும் சுவாமி, அம்பாள், உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. 21ம் தேதி மாலை 6.50 மணிக்கு சுவாமி கோயில் மணி மண்டபத்தில் தங்க விளக்கு தீபம் ஏற்றப்படும். தங்க விளக்கு தீபம் மறுநாள் 22ம் தேதி இரவு 7 மணி வரை எரியும்.22ம் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாள் வெள்ளி ரிஷிப வாகனத்திலும், ஆறுமுகநயினார் தங்க சப்பரத்திலும், சண்டிகேஸ்வரர் மற்றும் 63 நாயன்மார்கள் வீதியுலா நடக்கிறது.ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கணபதிமுருகன் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்துள்ளனர்.