திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ஆஞ்சநேயர் கோவிலில் ஸ்ரீராமநவமி விழாவரும் 14ம் தேதி துவங்கி ஒன்பது நாட்கள் நடக்கிறது. திருக்கோவிலுார் கிழக்கு வீதி ஆஞ்சநேயர் கோவிலில் வரும் 14ம் தேதி ஸ்ரீராம நவமி மகோத்சவ விழா துவங்குகிறது. 22ம் தேதிவரை ஒன்பது நாட்கள் நடக்கிறது.விழாவின் முதல் நாளான 14ம் தேதி ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் அருளுரை வழங்கி விழாவை துவக்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து, 18ம் தேதிவரை தினசரி மாலை 7:30 மணிக்கு பரனுார் கிருஷ்ணப்ரேமி சுவாமிகளின் உபன்யாசம் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 21ம் தேதி காலை 10:00 மணிக்கு ஆஞ்சநேய சுவாமிக்கு விசஷே திருமஞ்சனம் மாலை 6:00 மணிக்கு திவ்யநாம பஜனை நடக்கிறது. 22ம் தேதி காலை 8:00 மணிக்கு சீதா திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில் சத் சங்கத்தினர்கள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.