திண்டிவனம்: கோவடி ரோட்டில் அமைந்துள்ள லஷ்மி குபேர கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திண்டிவனம் வட்டம் மொளர் கிராமம், கோவடி ரோட்டில் ஸ்ரீ லஷ்மி குபேர கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் வைஸ்வரணனுக்கும், சித்ரலோவுக்கும் திருக்கல்யாண வைபவத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு, காலை 8:00 மணிக்கு கோ பூஜையும், 10:00 மணிக்கு திருமஞ்சனமும், மாலை 6:00 மணிக்கு வேள்வியும் நடந்தது. இதன் தொடர்ச்சியாக, இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை, விஜயலஷ்மி குபேர டிரஸ்ட் குபேர முருகன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.