எந்த கோயில் எந்த ஆகமத்தையொட்டி அமைக்கப்பெற்றதோ அந்த ஆகம ரீதியாகவே நித்திய, நைமித்திகப் பூஜைகளும், திருவிழாக்களும் நடத்த வேண்டுமென்பதே ஆகம விதி. ஆகமங்கள் பலவாயிருப்பதால், திருவிழாக்கள் முதலியன பலவிதமாக அமைந்துள்ளன. ஊர்கள் தோறும், கோயில்கள் தோறும் திருவிழாக்களில் வேறுபாடுகள் காண்பதற்கு இதுவே காரணம்.