அசுரர்களை அகற்றுவதன் பொருட்டும், சிவகணங்களையும், தேவர்களையும் அழைத்தற் பொருட்டும், கோயிலை ரட்சித்தற் பொருட்டும், பக்தர்களைப் பாதுகாக்கவும் கொடிமரம் நிறுவப்படுகிறது. சிவன் கோயில் கொடி மரத்தின் மேல்பாகத்தில் நந்தியையும், விஷ்ணு கோயிலில் கருடனையும், தேவி கோயில்களில் சிங்கத்தையும் விநாயகர் கோயிலில் மூஷிகத்தையும், முருகன் கோயிலில் மயிலையும், சாஸ்தா கோயிலில் குதிரையையும் அந்தந்த தேவதைகளுக்குத் தக்கவாறு அமைத்துள்ளனர்.