கூடலுார், குள்ளப்பகவுண்டன்பட்டியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த, முத்தாலம்மன் கோயில் விழா கொண்டாடப்பட்டது. கோயில் சீரமைப்பு பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஊர் நாட்டாண்மை மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி, இவ்விழாவை நடத்தினர். அதிகாலையில் பெண்கள் மாவிளக்கு எடுத்தனர். மாலையில் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். ராஜாசந்திரசேகரன் குடும்பத்தினர் சார்பில் விழா ஏற்பாடு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. அம்மன் உருவம் பொறித்த திரிசூலத்தை ஓய்வு பெற்ற எஸ்.பி., ராமகிருஷ்ணன், கோயிலுக்கு வழங்கினார். விழாக்கமிட்டியினர் சார்பில் கலை நிகழ்ச்சி நடந்தன.