மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் -அன்னுார் ரோடு காப்பி ஒர்க்ஸ் அருகிலுள்ள, சடைச்சி மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம், 29ம் தேதி கொடியேற்றம் மற்றும் பூச்சாட்டுடன் துவங்கியது. அம்மன் சுவாமிக்கு தினமும் அலங்கார பூஜைகள் நடைபெறுகின்றன. டேங்க் மேடு செல்வபுரம் விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீர்த்தக்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.நேற்று முன் தினம் மாலை, கோவிலில் சுமங்கலி பூஜை நடந்தது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இன்று இரவு பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைப்பும், நாளை காலை பொங்கல் வைத்தலும், மாலையில் மாவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. 10ம் தேதி மஞ்சள் நீராட்டும், மறுபூஜையும், அன்னதானமும் நடைபெறுகிறது.