பதிவு செய்த நாள்
08
மே
2018
01:05
எலச்சிப்பாளையம்: கண்ணனூர் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நாளை, 108 திருவிளக்கு பூஜை நடக்கிறது. எலச்சிபாளையம் ஒன்றியம், கண்ணனூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. கோவில், திருவிழா ஆண்டு தோறும், விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு விழா, கடந்த, 1ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நாளை இரவு, 7:00 மணிக்கு, 108 திருவிளக்கு பூஜை, அம்மனுக்கு அபி ?ஷகம் நடக்கிறது. சிறப்பு அலங்காரத்தில், அம்மன் அருள்பாலிக்கிறார். வரும், 10 காலை, 7:00 மணிக்கு, மாவிளக்கு பூஜை, கிடா வெட்டுதல், 8:00 மணிக்கு, தீர்த்தக்குடம், பால்குட ஊர்வலம் நடக்கிறது. அக்னி சட்டி எடுத்து, அலகு குத்தி, பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். மாலை, 4:00 மணிக்கு, மாவிளக்கு பூஜை, அம்மன் வீதி உலா வந்து அருள்பாலிக்கின்றனர். வரும், 11 காலை, 7:00 மணிக்கு, கம்பம் மற்றும் கும்பம், ஊர் கிணற்றில் விடுதல், மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர்மக்கள் செய்துள்ளனர்.