வீரபாண்டி: உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, நேற்று காலபைரவருக்கு சிறப்பு யாகபூஜைகள் நடந்தன. தேய்பிறை அஷ்டமியான நேற்று, கரபுரநாதர் கோவிலில் உள்ள, காலபைரவருக்கு சிறப்பு யாக பூஜைகள் செய்யப்பட்டு, யாக குண்டத்தில் வைக்கப்பட்ட, கலசங்களில் இருந்த புனிதநீரை கொண்டு பைரவருக்கு அபி?ஷகம் செய்யப்பட்டது. திருநீர் மற்றும் செவ்வரளி பூக்களால், கால பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.