கும்பாபிஷேகத்தின் போது மூலவருக்கு அடியில் எட்டுவிதமான மூலிகைகளை வைப்பர். இதற்கு ‘அஷ்டபந்தனம்’ என்று பெயர். மருந்து சாத்துதல் என்றும் குறிப்பிடுவர். சுக்கான்கல், கொம்பரக்கு, சாதிலிங்கம், செம்பஞ்சு, தேன்மெழுகு, எருமை வெண்ணெய்,குங்கிலியம், நற்காவி ஆகிய எட்டும் இதில் சேர்க்கப்படும்.